டாஸ்மாக் - கடவுளா அல்லது சாத்தானா?
நான் முதல்வரனால் முதலில் டாஸ்மாக் கடைகளை ஒழிப்பது தான். கொஞ்சம் கொஞ்சமாகவாவது ஒழிக்க முற்படுவேன். ஏன் என்றால், கூலி வேலை பார்க்கும் ஒருவன் தனது அன்றாட ஊதியத்தை தனது குடும்பத்திற்கு உபயோகிக்காமல், டாஸ்மாக்கு கொடுக்கிறான். அது எங்கே போகிறது என்றால், அரசுக்கு செல்கிறது. அரசிடம் இருந்து எப்படியோ ஒரு தனி நபரிடம் செல்கிறது. பணம் அங்கே போய் முடங்கி விடுகிறது.
இதனை தவிற்தல் வேண்டும். ஒரு நாளைக்கு டாஸ்மாக்கடைகளிருந்து வரும் வருமானம் என்னவென்று மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அப்படி தெரிந்தால்தான், மக்கள் உணர்வார்கள். குடிப்பதை நிருத்துவார்கள். டாஸ்மாக் கடைகளில் நல்ல வருமானம் வருவதால் தான் அது இன்னும் அன்றாட மக்களின் வாழ்க்கையில் வாழ்ந்து வருகிறது. அரசும் அதனை கைவிட மறுக்கிறது. அதனால் மக்கள் உடல் நலம் கெடுகிறது. அதற்கு மருத்துவழ்ச்செலவு ஆகிறது.
இதனையெல்லாம் நம்மால் தவிற்க முடியும். அப்படி நடந்தால் நாம் உலக வங்கியில் வாங்கிய கடனை கண்டிப்பாக அடைக்க முடியும்.
பின்னர் நாம் பிறநாட்டின் வளர்ச்சிக்கு உதவ முடியும். இது மட்டுமில்லாமல், நமது குடும்பங்களில் எந்த ஒரு பிரச்சனையும் வராது. ஆண் குடித்து விட்டு அந்த குடும்பத்தில் உள்ள அனைவரையும் அடிக்கிறான். துன்புறுத்துகிறான். இதுவெல்லாம் நடக்காது.
நமது மக்களின் பிரச்சனை என்னவென்றால், பணம் தான். அது சிலபேர்கிட்ட முடங்கி கிடப்பதன் காரணமாக, பலப்பேர்க்கு உபயோகமில்லாமல் போய்விடுகிறது. ஏன் பணம் என்று பித்து பிடித்து இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. எல்லோருக்கும் எல்லாம் கிடைத்தால் நன்றாக் இருக்கும். ஒரு திருடர்களும் இருக்க மாட்டார்கள். ஒரு குடிகாரர்களும் இருக்க மாட்டார்கள்.
குடிக் குடியைக் கெடுக்கும்! டாஸ்மாக் நாட்டை கெடுக்கும்.
கடவுளா அல்லது சாத்தானா என்று சொல்லப்போனால்,
அரசுக்கு, டாஸ்மாக் கடவுள் மாதிரி (மக்களுக்கு புரியாதவரை)மக்களுக்கு, டாஸ்மாக் சாத்தான் மாதிரி...(கொஞ்சம் கொஞ்சமாக அழித்து விடும்)Labels: அரசு, கடவுள், சாத்தான், டாஸ்மாக், முதல்வர்