முதல்வன் - ideal முதலமைச்சர்
Saturday, March 3, 2007
  டாஸ்மாக் - கடவுளா அல்லது சாத்தானா? - பகுதி 2
தமிழ் நாட்டில் உள்ள டாஸ்மாக் பற்றிய விவரத்தை இந்த இணையதளத்தில் காணலாம் - http://tasmac.tn.gov.in/
நமது மக்களின் குடியை கெடுக்கும் சாரயத்தை சப்லை செய்பவர்களின் பட்டியல் இங்கே காணலாம் - http://tasmac.tn.gov.in/suppliers.htm
அதனுடைய விலைகளை இங்கே காணலாம் - http://tasmac.tn.gov.in/Mrp.htm

தமிழக அரசுக்கு இப்போது 6000 கோடி (2005-06) ரூபாயாக வருமானம் வருகிறது. இது பற்றிய புள்ளி விவரம் இங்கே காணலாம் - http://tasmac.tn.gov.in/Turnover.htm
இதிலிருந்து பார்த்தால், ஒவ்வொரு வருடமும் பல ஆயிரம் கோடி பணத்தை நாம் வீன்னடிக்கின்றோம். நல்ல வளர்ச்சிக்கு செலவிடாமல், கெட்ட பாதையில் போய்க்கொண்டிருக்கிறோம்.

குடிக்காரர்களின் மனதை மாற்ற வேண்டும். எப்படி எய்ட்ஸ் போன்றவற்றிக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோமோ, அதே போல் நாட்டினுடைய வளர்ச்சியைப் பற்றி விழிப்புணர்வு முகாம் நடத்தி அதில் மக்களுக்கு, நாம் நாடு வளருவதற்கான திட்டத்தை விவரிக்க வேண்டும். இப்படி இருந்தால் நல்ல இருக்கும் என்று ஒவ்வொருடைய மனதில் பதிய வைக்க வேண்டும்.

மக்கள் நினைத்தல் தான் நாடு முன்னேறும். முதல்வன் நினைத்தால் அல்ல. முதல்வன் வழி காட்டியாகத்தான் இருக்க முடியும். அதனை பின்பற்றி, நாடு வளர்ச்சியடைய மக்கள் முன்வர வேண்டும். இரு கையை சேர்த்து தட்டினால் தான் சத்தம் வரும். அதேபோல் முதல்வனும் மக்களும் சேர்ந்து பாடுபட்டால்தான் நாடு முன்னேறும்.

சிந்திப்பீர்! சிந்திப்பீர்! சிந்திப்பீர்!

Labels: , ,

 
  டாஸ்மாக் - கடவுளா அல்லது சாத்தானா?
நான் முதல்வரனால் முதலில் டாஸ்மாக் கடைகளை ஒழிப்பது தான். கொஞ்சம் கொஞ்சமாகவாவது ஒழிக்க முற்படுவேன். ஏன் என்றால், கூலி வேலை பார்க்கும் ஒருவன் தனது அன்றாட ஊதியத்தை தனது குடும்பத்திற்கு உபயோகிக்காமல், டாஸ்மாக்கு கொடுக்கிறான். அது எங்கே போகிறது என்றால், அரசுக்கு செல்கிறது. அரசிடம் இருந்து எப்படியோ ஒரு தனி நபரிடம் செல்கிறது. பணம் அங்கே போய் முடங்கி விடுகிறது.

இதனை தவிற்தல் வேண்டும். ஒரு நாளைக்கு டாஸ்மாக்கடைகளிருந்து வரும் வருமானம் என்னவென்று மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அப்படி தெரிந்தால்தான், மக்கள் உணர்வார்கள். குடிப்பதை நிருத்துவார்கள். டாஸ்மாக் கடைகளில் நல்ல வருமானம் வருவதால் தான் அது இன்னும் அன்றாட மக்களின் வாழ்க்கையில் வாழ்ந்து வருகிறது. அரசும் அதனை கைவிட மறுக்கிறது. அதனால் மக்கள் உடல் நலம் கெடுகிறது. அதற்கு மருத்துவழ்ச்செலவு ஆகிறது.

இதனையெல்லாம் நம்மால் தவிற்க முடியும். அப்படி நடந்தால் நாம் உலக வங்கியில் வாங்கிய கடனை கண்டிப்பாக அடைக்க முடியும். பின்னர் நாம் பிறநாட்டின் வளர்ச்சிக்கு உதவ முடியும். இது மட்டுமில்லாமல், நமது குடும்பங்களில் எந்த ஒரு பிரச்சனையும் வராது. ஆண் குடித்து விட்டு அந்த குடும்பத்தில் உள்ள அனைவரையும் அடிக்கிறான். துன்புறுத்துகிறான். இதுவெல்லாம் நடக்காது.

நமது மக்களின் பிரச்சனை என்னவென்றால், பணம் தான். அது சிலபேர்கிட்ட முடங்கி கிடப்பதன் காரணமாக, பலப்பேர்க்கு உபயோகமில்லாமல் போய்விடுகிறது. ஏன் பணம் என்று பித்து பிடித்து இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. எல்லோருக்கும் எல்லாம் கிடைத்தால் நன்றாக் இருக்கும். ஒரு திருடர்களும் இருக்க மாட்டார்கள். ஒரு குடிகாரர்களும் இருக்க மாட்டார்கள்.

குடிக் குடியைக் கெடுக்கும்! டாஸ்மாக் நாட்டை கெடுக்கும்.
கடவுளா அல்லது சாத்தானா என்று சொல்லப்போனால்,
அரசுக்கு, டாஸ்மாக் கடவுள் மாதிரி (மக்களுக்கு புரியாதவரை)
மக்களுக்கு, டாஸ்மாக் சாத்தான் மாதிரி...(கொஞ்சம் கொஞ்சமாக அழித்து விடும்)

Labels: , , , ,

 
  ஒரு நாள் முதல்வன்?
ஒரு நாள் முதல்வன்? என்ற தலைப்பை வைத்து தொடங்குகிறேன். இது சாத்தியம் தான் என்று படத்தில் கூறப்படுகிறது. சங்கரின் முதல்வன் படம் தான் மூல காரணம் இந்த பதிவை தொடங்குவதற்கு. கடந்த சில நாட்களாக முதல்வன் திரைப்படத்தை தற்செயலாக பார்க்கப் முற்படுகிறேன். அதனை பார்க்கும் பொழுது நான் முதல்வரனால் என்ன என்று தோன்றுகிறது. அதே போன்று, அர்ஜுன் செய்யும் நல்ல காரியங்களையெல்லாம் நான் செய்வேனா என்று யோசிக்கிறேன். படத்தில் எல்லாம் சுலபம். நிஜ வாழ்க்கையில் செய்யமுடியுமா?....

நான் முதல்வரனால்... என்ற கட்டுரையை சிறு வயதில் தேர்வுகளில் கேட்கப்படும். சிறுவர்கள் இரண்டு அல்லது முன்று பக்கத்திற்கு எழுதுவார்கள். நான் எழுதப்போகும் இந்த பதிவு இரண்டு அல்லது முன்று பதிவோடு அல்லாமல், ஒரு முதல்வன் எவ்வாறு இருந்தால் நன்றாக இருக்கும் என்று யோசித்து என் மனதில் தோன்றியதை எழுதுகிறேன்.

நம் நாடு முன்னேராமல் இருப்பதற்கு என்ன காரணம்?
1. அவரவர், அவரது வேலையை சரிவர செய்யாதிருத்தல்
2. எதுக்கேடுத்தாலும் லஞ்சம். பொதுவாக தெரியாது. ஆனால் எல்ல இடத்திலும் உள்ளது. நடக்கிறது.
3. (சுயநல)அரசியல்
4. பொதுமக்களின் அறியாமை
5. இன்னும் கண்னுக்கு தெரியாதவை...

என்னடா இவன் ஒழுங்கு மாதிரி சொல்லுரானே என்று யோசிப்பீர்கள். ஆனால் இது மறைக்கமுடியாத உண்மை. எப்படியாவது என்னால் முடிந்தவரை சுட்டிக்காட்டி அதற்கு தீர்வும் சொல்கிறேன். தவறுகளை சுட்டிக்காட்டுவது சுலபம். அந்த இடத்தில் இருந்து யோசித்து முடிவு எடுப்பது கடினம்.

எதேனும் பிழை கண்டுபிடித்தீர்கள் என்றால் திருத்த உதவவும். உங்களது கருத்தினையும் நான் வேண்டுகிறேன்

Labels: ,

 
முதல்வன் - இது படம் அல்ல. ஒரு இளைஞனின் கிறுக்கல்

Name:
Location: சென்னை, அழகிய தமிழ் நாடு

நான் இந்த நாட்டின் முதல்வராக வர துடிக்கும் ஒரு இலைஞன். ஏன் இந்த பதிவு? எனக்குல் உள்ள கருத்தினை நான் மக்களுக்கு எடுத்துச்சொல்ல வேண்டும்.

Archives
2007-02-25 /


Powered by Blogger

Subscribe to
Posts [Atom]